இபிஎஸ்-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் திடீர் ஐடி ரெய்டு-நடந்தது என்ன?

இபிஎஸ்-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் திடீர் ஐடி ரெய்டு-நடந்தது என்ன?

இபிஎஸ்-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் திடீர் ஐடி ரெய்டு-நடந்தது என்ன?
Published on

நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு மதுரை சாலை அனந்தபுரி நகரில் வீடு மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதன் உரிமையாளர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகம் மதுரை சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் இருந்து வந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகம் என ஐந்து இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா அல்லது தற்போது அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனையில் அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து சோதனை நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுகவின் ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து செய்யாத்துரை நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2018 ஆம் ஆண்டு இங்கு ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com