தமிழ்நாடு
புகாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு
புகாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு
புகாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகாரி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 76 இடங்களிலும், சென்னையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் சோதனை முடிவில், புகாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இன்றும் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் தங்களது ஆய்வினை தொடர்ந்து வருகின்றனர்.