கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 7 இடங்களில் ஐடி ரெய்டு

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 7 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சுமார் எட்டு நாட்கள் நடைபெற்ற அந்த சோதனை 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜியின் நண்பரான மணி என்பவரின் கொங்கு மெஸ் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் எம்சிஎஸ் சங்கர் அலுவலகம் உட்பட நான்கு இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

IT raid
IT raidpt desk

இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கரூரில் சோதனை நடத்தினர். அப்போது செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அலுவலகத்தை சீல் வைத்துச் சென்றனர். மீண்டும் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி வருமானவரித் துனறயினர் ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக பழனிமுருகன் ஜுவல்லரியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று கரூரில் வருமானவரித் துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 7 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இதில், செந்தில் பாலாஜியின் நண்பரான கொங்கு மெஸ் சுப்பிரமணியின் வீடு, சக்தி மெஸ் அலுவலகம், ராமா விலாஸ் நூற்பாலை அலுவலகம் போன்ற இடங்கள் நான்கு உள்ளன. மேலும் பாலவிநாயகா குவாரி அலுவலகம் மற்றும் சக்தி மெஸ் உரிமையாளர்களின் நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்கள், மூன்று உள்ளன. இந்த சோதனைக்கு மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com