\
தமிழகம் முழுவதும் விடாது தொடர்ந்து பெய்யும் மழை - சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

தமிழகம் முழுவதும் விடாது தொடர்ந்து பெய்யும் மழை - சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

தமிழகம் முழுவதும் விடாது தொடர்ந்து பெய்யும் மழை - சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்
Published on: 
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
சென்னை:
சென்னையில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, கே கே நகர், ஆதம்பாக்கம், ஈக்காட்டு தாங்கல், அசோக்நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தேங்கியது. மேலும் சென்னையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி:
திருச்சி மலைக்கோட்டை, மத்திய பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், திருவெறும்பூர், கேகே நகர், உறையூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் திருவள்ளூர், செங்குன்றம், அலமாதி, பூச்சி அத்திப்பேடு, சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
புதுச்சேரி:

புதுச்சேரி நகரப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் என பரவலாக மழை பெய்து வருகின்றது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com