கனிமொழி எழுப்பிய 'இந்தி 'புகார் விவகாரம்: விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு
இந்தி தெரியாது என்று கூறியதால், நீங்கள் இந்தியரா என்று சிஐஎஸ்எப் வீரர் கேட்டார் என்று கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சிஐஎஸ்எப் “எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எப்பின் கொள்கை அல்ல” என்று கூறியுள்ளது.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி “ இன்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை “நீங்கள் இந்தியரா?” என்று வினவினார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது” என்று கேள்வியெழுப்பினார் இவரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள சி.ஐ.எஸ்.எஃப் “இது குறித்து விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எப்பின் கொள்கை அல்ல” எனத் தெரிவித்துள்ளது.