கடலூரில் அதிகரித்துவரும் நோயாளிகள்: 108 ஆம்புலன்ஸில் கூட்டமாக ஏற்றிவரும் அவலம்

கடலூரில் அதிகரித்துவரும் நோயாளிகள்: 108 ஆம்புலன்ஸில் கூட்டமாக ஏற்றிவரும் அவலம்

கடலூரில் அதிகரித்துவரும் நோயாளிகள்: 108 ஆம்புலன்ஸில் கூட்டமாக ஏற்றிவரும் அவலம்
Published on

கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் அதிகரித்துவரும் நோயாளிகள். 108 ஆம்புலன்சில் கூட்டம் கூட்டமாக ஏற்றி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஒரே நாளில் கடலூர் ,நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த நோய்த்தொற்று உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை கண்டறிந்து விருத்தாசலம் கொரோனா மையத்திற்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

நோய்த் தொற்றுள்ளவர்களை 108 ஆம்புலன்சில் கூட்டம் கூட்டமாக ஏற்றி வரும் அவலநிலை உள்ளது. ஒரே நேரத்தில் அதிக அளவு நோயாளிகள் வருவதால் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர். 350 படுக்கை வசதி கொண்ட தனிமை மையத்தில் தற்போது 150 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 200 படுக்கைகள் இன்று ஒரே நாளில் நிரம்பிவிடும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com