தமிழ்நாடு
பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை.. வீட்டுத் திண்ணையில் போட்டுவிட்டுச் சென்ற அவலம்I
பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை.. வீட்டுத் திண்ணையில் போட்டுவிட்டுச் சென்ற அவலம்I
கண்டாச்சிபுரம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை வீட்டு திண்ணையில் போட்டுவிட்டுச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள பீமாபுரம் கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் வீட்டுத் திண்ணையில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை யாரோ வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து குழந்தை அழுகும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது திண்ணையில் அழகான ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது, இது குறித்து கிராம மக்கள் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைத்தனர் இச்சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.