சென்னை: தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர்: ஆன்லைன் ரம்மியில் ரூ.7 லட்சம் இழந்ததே காரணம்?

சென்னை: தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர்: ஆன்லைன் ரம்மியில் ரூ.7 லட்சம் இழந்ததே காரணம்?

சென்னை: தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர்: ஆன்லைன் ரம்மியில் ரூ.7 லட்சம் இழந்ததே காரணம்?
Published on
சென்னையில் ஆயுதப்படை காவவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதற்கு ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாயை இழந்ததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்காவை சேர்ந்தவர் வேலுச்சாமி சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், பாதுகாப்புப் பணியில் இருந்த அவர் கடந்த 4ஆம் தேதி கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். நூலிழையில் உயிர்தப்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள வேலுச்சாமி, அந்த விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் இறங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com