நாளை முதல் சென்னை நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை

நாளை முதல் சென்னை நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை

நாளை முதல் சென்னை நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை
Published on

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை நடைபெற்றது. இதனால் மருந்து வாங்க வந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு மருந்து விற்பனை தொடங்கும் என்றும் தினசரி 300 நபர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம் என்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com