வரும் ஏப்.3ஆம் தேதி  ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்

வரும் ஏப்.3ஆம் தேதி  ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்
வரும் ஏப்.3ஆம் தேதி  ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்
ஏப் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் நியாய விலை கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயானது தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்று அதிகரிக்காமல் தடுப்பதற்காக நாடு முழுவதும்  144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு, சுகாதாரத் துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதே போல மத்திய, மாநில அரசுகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளன. ஆனால் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே  பொறுப்பற்று சுற்றித் திரிந்து வருகின்றனர். அப்படி தடையை மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், அறிவுரைகள் வழங்கியும் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்  அடுத்த மாதம் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் நியாய விலைக் கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும்  ஏப்.2ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.1000 நிதியுதவி வழங்கும் பணி தொடங்கவுள்ளதால் 3ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு, ஞாயிறன்று ரேஷன் கடைகள் செயல்படுவது இதுவரை இருந்து வந்த நடைமுறை. ஆனால் 
வெள்ளிக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும் என்பதால், அந்நாளுக்கான ஊழியர்களின்  விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com