காவல் ஆணையரிடம் உருக்கமாக நன்றி கூறிய ஐடி ஊழியர் லாவண்யா..!
சென்னை பெரும்பாக்கத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஐடி பெண் ஊழியர் லாவண்யாவை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காவல்துறையினர் தன்னை விரைவாக காப்பாற்றியதாக லாவண்யா உருக்கமாக தெரிவித்தார்.
கடந்த 12ம் தேதி இரவு பெரும்பாக்கம் பகுதியில், இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த ஐடி பெண் ஊழியர் லாவண்யாவை கொள்ளையர்கள் தாக்கிவிட்டு நகை, பணம், வாகனத்தை திருடி சென்றர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் லாவண்யாவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்தும் அவர் விரிவாக கேட்டறிந்தார். அப்போது கொள்ளையர்கள் தாக்கிய சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து தன்னை காப்பாற்றியதாக காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் லாவண்யா உருக்கமாக நன்றி தெரிவித்தார்.