தமிழ்நாடு
ஐடி ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட விவகாரம்: 11பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது
ஐடி ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட விவகாரம்: 11பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது
சென்னையில் ஐடி ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் கைதான விநாயகமூர்த்தி உட்பட 11பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த 12ம் தேதி இரவு சென்னை பெரும்பாக்கம் பகுதியில், இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த ஐடி பெண் ஊழியர் லாவண்யாவை கொள்ளையர்கள் தாக்கிவிட்டு நகை, பணம், வாகனத்தை திருடி சென்றனர். கொள்ளையர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளான லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினார். இந்த வழக்கில் விநாயமூர்த்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைதான விநாயகமூர்த்தி உள்பட 11பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.