கோவை | வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட இமெயில்.. வேலையை இழந்த ஐடி ஊழியர்கள்! வெடித்தப் போராட்டம்

கோவையில், அமெரிக்காவை சார்ந்த ஐடி நிறுவனம் திடீரென மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சுங்கம் பகுதியில் இயங்கி வந்த Focus Edumatics எனும் அமெரிக்காவை சார்ந்த ஐடி நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று திடீரென மூடப்பட்டது. இதனால் அங்கு பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோவை தொழிலாளர் துறை அலுவலர் அலுவலகத்தில் திரண்டு, தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன், சம்பளம் மற்றும் நிறுவனத்தில் அளித்துள்ள பள்ளி கல்லூரி அசல் ஆவணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து எழுத்துப்பூர்வமாக தங்கள் கோரிக்கைகள் குறித்து கடிதம் பெற்று தர வேண்டுமென வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக முழுத் தகவல்களை அறிய இந்த வீடியோவைக் காணவும்.

it company closure in coimbatore employees action
கோவை | திடீர் பணிநீக்கம் செய்த ஐ.டி நிறுவனம்... நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com