தேசிய அளவில் கொண்டு செல்லப்படும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை..!
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்யும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமிழகத்தில் எம்.பிக்கள் தொகுதி எண்ணிக்கை குறையும் சூழல் உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவித்திருந்தார்..
அதன்படி அமைச்சர்கள் எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு விரைவில் மற்ற மாநிலங்களுக்கு சென்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளனர். கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி கருணாநிதியும், ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செல்ல உள்ளனர்.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டம் தொடர்பான முழு விபரம்..