'சூரியனை ஆய்வு செய்யும் பணி 2 ஆண்டுக்குள் நிறைவு' - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

'சூரியனை ஆய்வு செய்யும் பணி 2 ஆண்டுக்குள் நிறைவு' - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

'சூரியனை ஆய்வு செய்யும் பணி 2 ஆண்டுக்குள் நிறைவு' - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
சூரியனின் நிகழ்வுகளை ஆராய்வதற்கான பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த கோதவாடி பகுதியில் 152 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் தருவாயில் உள்ளது. தனது சொந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் தருவாயில் உள்ள குளத்தை மயில்சாமி அண்ணாதுரை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com