\
சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு

சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு

சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு
Published on

சென்னையில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 18 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோவை கார் வெடி விபத்திற்கு பிறகு இந்தியா முழுவதும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்தது. அதன்படி சென்னையில் மட்டும் 18 நபர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் மண்ணடி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் சென்னை காவல்துறையின் தீவிர  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புடன் பணபரிவர்த்தனை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 5 நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. என்.ஐ.ஏ. சோதனை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தமிழ்க போலீசார் தனியாக சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com