\
சேரன் எக்ஸ்பிரஸில் ஈஷா: சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

சேரன் எக்ஸ்பிரஸில் ஈஷா: சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

சேரன் எக்ஸ்பிரஸில் ஈஷா: சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்
Published on

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேரன் எக்ஸ்பிரஸில் ஈஷா மையத்தின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து விரைவு ரயில்களையும் நவீன ரக பெட்டிகளுடன் மாற்றுவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் தொடக்கமாக சமீபத்தில் கோவை - சென்னை சேரன் எக்ஸ்பிரஸில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மாற்றி அமைக்கப்ட்ட ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்துள்ளன. இந்த சூப்பர் ஃபாஸ்ட் ரயில் பெட்டிகளில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் படம் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.‌

விரைவு ரயில் பெட்டிகளில் குறிப்பாக அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்று வருவது வழக்கம், ஆனால் இந்த சேரன் எக்ஸ்பிரஸில் ஈஷா மையத்தின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு கோவையின் பாரம்‌பரியத்தை விளக்கும் படத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை‌ எழுந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com