\
முதல்வர் டெல்லி பயணத்திற்கும், சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்புஇருக்கிறதா? சீமான் கேள்வி

முதல்வர் டெல்லி பயணத்திற்கும், சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்புஇருக்கிறதா? சீமான் கேள்வி

முதல்வர் டெல்லி பயணத்திற்கும், சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்புஇருக்கிறதா? சீமான் கேள்வி
Published on

முதல்வர் டில்லி பயணத்திற்கும், சசிகலாவின் திடீர் உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் “ 4 ஆண்டுகளாக சசிகலா உடல் நிலையில் ஒன்றுமில்லாத நிலையில் திடீர் என உடல் நலம் குன்றியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் டில்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என தெரிவித்தார்

வரும் ஜனவரி 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகவிருந்த நிலையில், அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்றிற்காக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com