மகளிர் உரிமைத் தொகை பெற சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்து சென்றாரா மாற்றுத்திறனாளி பெண்?

மகளிர் உரிமைத் தொகை பெற சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்து சென்றாரா மாற்றுத்திறனாளி பெண்? பின்னணி என்ன?
Magalir Urimai Thogai
Magalir Urimai ThogaiPt Web

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்து சென்றதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு வசதியாக 3 சக்கர நாற்காளியை ஏற்பாடு செய்யவில்லை என்றும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உண்மையில் நடந்தது என்ன என்று விசாரணையை தொடங்கியது நமது புதியதலைமுறை செய்திக்குழு.

அப்போது, தவழ்ந்து சென்ற பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த சரசு என்பது தெரியவந்தது. அதேபகுதியில் அமைச்சர் சக்கரபாணி பங்கேற்ற மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழாவுக்கு அவர் தவழ்ந்து சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசியதில், இளம்பிள்ளை வாதம் நோய் காரணமாக கால்கள் செயல்படாததாகவும், குடும்பத்தார் கைவிட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்துவருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து, சுட்டெரிக்கும் வெயிலில் உரிமைத் தொகை பெறத்தான் தவழ்ந்து சென்றீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "அப்படியெல்லாம் இல்லை. நான் பெறும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1,200 பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த இயலவில்லை.

இதனால் கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அந்த தொகையை உயர்த்தி வழங்குமாறு கேட்கவே சென்றேன்" என்று பதிலளித்தார்.

இருந்தபோதும், அத்தனை காவலர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் இருந்தும், மாற்றுத்திறனாளி பெண் தவழ்ந்து சென்றதை கண்டுகொள்ளாமல்விட்டது காண்போரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு தேவையான உதவியை அதிகாரிகள் செய்துதர வேண்டும் என்று கோரிக்கையையும் பலர் விடுத்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com