காளியம்மாள்
காளியம்மாள்புதிய தலைமுறை

நாதகவிலிருந்து காளியம்மாள் விலகலா?

சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தது.
Published on

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களாக முக்கிய பொறுப்புகளில் வகிப்பவர்களும் மாவட்ட செயலாளர்களும் தொடர்ந்து விலகி வருகின்றனர்.

சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தது.

இந்தநிலையில்தான், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மனப்பாடு பகுதியில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் காளியம்மாள் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்று இல்லாமல் , சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பிரகாசம் என அச்சிடப்பட்டுள்ளது. இதுதான், தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

இது, மனப்பாட்டில் உள்ள முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிரேன்ஸிட்டா தனது மகளின் முதல் திருவிருந்து நிகழ்ச்சிக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழாகும்.

அந்த அழைப்புகளில் ஒரு புறம் நிகழ்ச்சிக்கான உறவினர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல் மற்றொருபுறம் அரசியல் பிரமுகர்கள், கோவில் பங்கு தந்தைகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. மற்ற அரசியல் கட்சி நிர்வாகிகளின் பெயர்களுக்கு கீழ் அவர்களது பொறுப்புகள் அச்சிடப்பட்டிருந்த நிலையில் காளியம்மாள் பெயரின் பின் மட்டும் சமூக செயற்பாட்டாளர் என அச்சிடப்பட்டுள்ளது.

இது தற்போது வைரலாகி வரும் நிலையில் காளியம்மாள் அக்கட்டிசியில் இருந்து விலகுவதாக தகவல்கள் மீண்டும் வெளியாகி வருகின்றன.

அழைப்பிதழை அச்சிட்ட வீட்டின் உரிமையார் சொல்வதென்ன?

” எங்களுக்கு நாம் தமிழர் கட்சியில் அவ்வளவு பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது என்பதால் காளியம்மாள் பெயருக்கு கீழ் சமூக செயல்பாட்டாளர் என்று அச்சிட்டு உள்ளோம். மேலும், மீனவ குடும்பத்தில் பிறந்த பெண்மணி தற்போது மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கான மக்கள் பணி ஆட்சி வருகிறார். அவர் தென்பகுதி மக்களுக்கும் தேவை என்பதை உணர்த்தும் விதமாக எங்கள் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக அவரது பெயரை சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிட்டோமே தவிர வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.”

காளியம்மாள் சொல்வதென்ன?

இது குறித்த அச்சிடப்பட்ட அழைப்பிதழ் காளியம்மாளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரும் நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருகை தருவதாக கூறியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

காளியம்மாள்
“ஃப்ரீ ஃபயர் விளையாட முடியவில்லை” வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்

நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதென்ன?

இச்செய்திகள் உண்மையா? என்பதை உறுதிசெய்ய காளியம்மாளின் நெறுங்கிய வட்டாரத்தில் கேட்டபோது,

அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது உறுதிதான் என்று தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே காளியம்மாள் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும், ஏற்கெனவே சீமான் காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக வெளியான ஆடியோவினால் அவர் அதிருப்தியில் இருந்தபோது மீண்டும் மேடையில் வைத்து சீமான் காளியம்மாளை கண்டித்தது இன்னும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பிறகு காளியம்மாள் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை . அதனால், சமீப நாட்களாகவே கட்சியில் இருந்து விலகும் முடிவில்தான் காளியம்மாள் இருக்கிறார் என்று அவர் விலகப்போவதை உறுதிபடுத்தியுள்ளனர்.

ஆனால் அழைப்பிதழ் விவகாரத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அது பத்திரிக்கை வீட்டார் அவர்களே போட்டுக்கொண்டது என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

காளியம்மாள்
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன்... 7 வீடுகளில் கைவரிசை!

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சீமானிடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, “ இலையுதிர்காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர்காலம். கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் விலகலாம். அது அவர்களது விருப்பம் ”. எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com