நிலவில் நிலம் வாங்குவது சாத்தியமா? விளக்கம் கொடுத்த விஞ்ஞானி!
இளைஞர் ஒருவர் வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது சட்டரீதியாக சாத்தியமில்லை என்று விஞ்ஞானி த. வெங்கடேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார். 1967 சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் படி எந்த நாடோ, தனிநபரோ கோள்களில் உரிமை கோர முடியாது; எனவே இத்தகைய ஆவணங்கள் novelty gift மட்டுமே என சொல்லப்படுகிறது.
நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் சரவணன்(32) என்பவர், தனது வருங்கால மனைவி வர்ஷிக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனத்தின் மூலம் வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த தம்பதிக்கு வரும் செப்டம்பர் 17-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதனால் உலகில் யாரும் கொடுத்திடா பரிசினை தனது மனைவிக்கு கொடுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் நிலவில் நிலம் வாங்கியதாக அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்தசூழலில் நிலவில் நிலம் வாங்கியது என்று அவர் கூறியது பொய்யாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த நிலையில், அதுகுறித்த விளக்கம் ஒன்றை விஞ்ஞானி ஒருவர் கொடுத்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த நபர் தனது வருங்கால மனைவிக்காக நிலவில் நிலம் வாங்கியதாகக் கூறியுள்ள நிலையில், நிலவில் நிலம் வாங்குவது சட்டப்படி சாத்தியமில்லை என்று விஞ்ஞானி த. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வருங்கால மனைவிக்காகச் சுவிட்சர்லாந்து தனியார் நிறுவனம் மூலம் 23 ஆயிரம் ரூபாய் செலுத்தி நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக ஆவணங்களை வெளியிட்டிருந்த நிலையில், சுவிட்சர்லாந்து இதுவரை நிலவுக்கு எந்தவொரு விண்கலத்தையும் அனுப்பாத சூழலில், அந்நாட்டுத் தனியார் நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாகக் கூறுவது மோசடியாக இருக்கக்கூடும் என விஞ்ஞானி த. வெங்கடேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
1967 ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின் படி எந்த நாடோ, தனிநபரோ கோள்கள் மீது உரிமை கோரமுடியாது என்பதால், நிலவில் சட்டப்பூர்வமாக நிலம் வாங்க முடியாது என்றும், இது ஒரு novelty giftஆக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

