நீதித்துறை அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் வகையில் சட்டதிருத்தமா.?-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

நீதித்துறை அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் வகையில் சட்டதிருத்தமா.?-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
நீதித்துறை அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் வகையில் சட்டதிருத்தமா.?-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

போலியான பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி பத்திர பதிவுகள் குறித்து விசாரிக்கவும், அவற்றை ரத்து செய்யவும் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தங்களுக்கு தடை விதிக்க கோரியும், இதை ரத்து செய்யக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நீதித்துறையின் அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் வகையில் மாவட்ட பதிவாளர்களுக்கு இந்த சட்ட திருத்தம் அதிகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போலியானவை என்று முடிவுக்கு வருவது தொடர்பாக எந்த ஒரு விதிமுறைகளும், நடைமுறைகளும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும், ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தில் எந்த கால வரம்பும் நிர்ணயிக்காததால் 30 முதல் 50 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களையும் மாவட்ட பதிவாளர்கள் விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள முடியும் என்று அச்சம் தெரிவித்துள்ள மனுதாரர், இந்தச் சட்டத் திருத்தம் லஞ்ச லாவண்யத்துக்கும் மிரட்டலுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் மாலா அமர்வு, நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com