5 வருடமாக விஜய்யுடன் பேசவில்லையா? - எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்.!

5 வருடமாக விஜய்யுடன் பேசவில்லையா? - எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்.!

5 வருடமாக விஜய்யுடன் பேசவில்லையா? - எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்.!
Published on

விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்துவேறுபாடு இருக்கிறதா என்பது தொடர்பான கேள்விக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார். 


“அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், கட்சி பெயர் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை. அந்தக் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்குரித்தான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜயின் தந்தை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரிடம் விஜயின் அறிக்கை தொடர்பான கேள்வியை முன்வைத்த போது “ அது அவர் கூறியிருக்கிறார்” என்று பதில் அளித்தார்.

மேலும் உங்களுக்கும் விஜய்க்கும் 5 ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு வார்த்தை இல்லை என்பது குறித்தான கேள்வியை முன்வைத்த போது “ சிலரின் கற்பனைக்கெல்லாம் நான் விளக்கம் கூற முடியாது. நாங்கள் கொரோனா காலங்களில் கூட பல முறை சந்தித்து பேசினோம்.” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, அது மக்கள் இயக்கமாக மாறியது. அதில் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காகவும், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com