"வீடு கட்டி முடித்தும் கைக்கு கிடைக்கவில்லை"- இருளர் இன மக்கள் வருத்தம்

எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தும் உரிய நேரத்தில் வழங்காததால் புயலின்போது உணவுக்காக மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக இருளர் இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இருளர் இன மக்கள் வருத்தம்
இருளர் இன மக்கள் வருத்தம்புதிய தலைமுறை

எங்களுக்கு என கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கொடுத்து இருந்தால் புயல் மழையில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என இருளர் பழங்குடியினர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இருளர் பழங்குடியினர்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் 76 குடியிருப்புகளும், சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகளும், அதேபோல காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டுகுளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகளும், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178 குடியிருப்புகளும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கத்தில்  31 குடியிருப்புகளும் என காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மொத்தம் 443 குடியிருப்புகள் ரூ.19 கோடியே 37 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில்  பழங்குடியினர்களுக்காக கட்டப்பட்டு 90% கட்டுமான பணிகள் நிறைவடைந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் உள்ளது.

புயல் மழை காலங்களில் இந்த வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்கு அளித்திருந்தால் நிவாரண முகாம்களில் தங்கவைக்க வேண்டிய் தேவை இருந்திருக்காது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு ”மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள குடியிருப்புகள் விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.” என உறுதி அளித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com