ஐஆர்சிடிசி இணையதள சேவை நிறுத்தம்

ஐஆர்சிடிசி இணையதள சேவை நிறுத்தம்

ஐஆர்சிடிசி இணையதள சேவை நிறுத்தம்
Published on

ரயில் பயணத்திற்காக டிக்கெட் பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் பராமரிப்பு பணி காரணமாக, இன்று இரவு வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ரயில் பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ரயில்வே துறையை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ஐஆர்சிடிசி இணையதளத்தின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை இணையத‌ளம் மூலம் டிக்கெட் முன்பதிவு மற்றும் டிக்கெட் ரத்து செய்யும் ‌பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com