\
Iran Opens New Military Training Camp for Women Amid War Tensions
பெண்களுக்கான ராணுவ பயிற்சிReuters

போருக்கு ஆயத்தமாகிறதா ஈரான்? துப்பாக்கி சுடும் பயிற்சியில் பெண்கள்.. திறக்கப்பட்ட ராணுவ முகாம்!

இந்த பயிற்சி முகாமில், பெண்களுக்குத் துப்பாக்கிகளைக் கையாள்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது, இயந்திரத் துப்பாக்கிகளை இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
Published on: 

ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் 8 மாதங்களைக் கடந்தும் தொடர் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், போருக்குத் தயாராகும் வகையில், பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் டெஹ்ரானில் திறக்கப்பட்டுள்ள புதிய ராணுவ முகாம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, தெஹ்ரானின் புகழ்பெற்ற ஆஸாதி சதுக்கத்தின் (Azadi Square) மேற்குப் பகுதியில் இந்தப் பெண்களுக்கான ராணுவப் பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஈரானின் தன்னார்வப் படையான பாசிஜ் (Basij) அமைப்பின் கீழ் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், பெண்களுக்குத் துப்பாக்கிகளைக் கையாள்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது, இயந்திரத் துப்பாக்கிகளை இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, ராக்கெட் லாஞ்சர்கள், ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சுவரில் ஏறி இறங்குவது, கயிறு வழியாக இறங்குவது போன்ற உடல் வலிமை மற்றும் தற்காப்புப் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன. இந்தப்பயிற்சி குறித்தான வீடியோக்கள் சமூக வளைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் பெண்கள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாட்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதாகவும், போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அசோசியேட் பிரஸ் (AP) செய்து வெளியிட்டுள்ளது.

Reuters

இதற்கிடையில், ஈரானில் 'ஜான் ஃபடா' எனப்படும் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் தன்னார்வலர்களை இணைக்கும் இயக்கம் ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் 3 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இந்த இயக்கத்தில் பதிவு செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்றும் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்போது பெண்களையும் ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருவது, ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதாக பார்க்கப்படுகிறது.

Iran Opens New Military Training Camp for Women Amid War Tensions
டிரம்ப் கெடுபிடி எதிரொலி! இந்தியர்களுக்கு IBM கொடுத்த அதிர்ச்சி!