\
''திட்டங்களின் நிலை:ஆளுநருக்கு சமர்ப்பிக்க தயாராகுக" - தலைமை செயலாளர் இறையன்பு

''திட்டங்களின் நிலை:ஆளுநருக்கு சமர்ப்பிக்க தயாராகுக" - தலைமை செயலாளர் இறையன்பு

''திட்டங்களின் நிலை:ஆளுநருக்கு சமர்ப்பிக்க தயாராகுக" - தலைமை செயலாளர் இறையன்பு
Published on: 

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களும் தயாராக இருக்குமாறு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயின்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்' என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com