\
காவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும் - ஐபிஎஸ் சங்கம்

காவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும் - ஐபிஎஸ் சங்கம்

காவலர்களை அனைவரும் மதிக்க வேண்டும் - ஐபிஎஸ் சங்கம்
Published on

அத்திவரதர் வைபவத்தில் காவல் பணியில் உள்ளவர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று ஐபிஎஸ் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்திற்கு, திருவள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவர், வி.ஐ.பி வரிசையில் நுழைவுச் சீட்டுகளை பரிசோதிக்காமல் பக்தர்களை உள்ளே அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வாளரைத் திட்டும் வீடியோ வெளியானது. 

கடந்த 9ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையர் ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து மிரட்டல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். மேலும், ஆட்சியருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில், அத்திவரதர் வைபவத்திற்கு காவல்துறை தரப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அத்திவரதர் வைபவத்தில் காவல் பணியில் உள்ளவர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம் எனவும் ஐபிஎஸ் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com