கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரணை
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தனியார் பள்ளியொன்றில் மாணவியொருவர் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானார்.
இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை இன்று காலை மீரா ஜாக்சனை பெங்களூருவில் கைது செய்தது. கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் சம்பவம் நடந்த பள்ளி முன்பு போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை.