தமிழ்நாடு
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பலி: அடித்துக் கொலையா?
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பலி: அடித்துக் கொலையா?
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகிலுள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்த பழனி என்பவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையிலுள்ளன. இருசக்கர வாகனத்தில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டதாக அவரை விசாரணைக்காக ஆலங்குளம் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினர் பழனியை அடித்துக்கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

