பெட்ரோல் டீசலுக்கு 'லோன்' ! அறிமுகமானது புதிய கடன் திட்டம்

பெட்ரோல் டீசலுக்கு 'லோன்' ! அறிமுகமானது புதிய கடன் திட்டம்

பெட்ரோல் டீசலுக்கு 'லோன்' ! அறிமுகமானது புதிய கடன் திட்டம்
Published on

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வர்த்தகர்களும்,பொதுமக்களும் வெகுவாக பாதித்து வரும் நிலையில்,பெட்ரோல்,டீசலுக்கு கடனுதவி திட்டத்தை நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி,கச்சா எண்ணய் விலை உயர்வு,விலையை எண்ணெய் நிதுவனங்களே நிர்ணயிக்கும் நிலை என பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாகனக்கடன் வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று எரிபொருளுக்கான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல்,டீசலை பங்கில் பணம் கொடுத்து நிரப்பாமல் கடனாக வாடிக்கையாளர்கள் பெறும் வசதி ஏற்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக டீசல் லிட்டருக்கு 85 பைசா வீதம் மானியமும் கொடுக்கப்படுவதால், இதனை டிரான்ஸ்போர்ட் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளரகள் பெட்ரோல் பங்கில் தங்களது மொபைல் எண்ணை தெரிவித்து எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்.பின்னர் அதற்கான தொகையை செலுத்தலாம். அதற்கான குறைந்த பட்ச வட்டி வசூலிக்கப்படும் அந்த வட்டியானது மானிய தொகையிலேயே பிடித்தம் செய்யப்படுவதால் எரிபொருள் நிரப்புவரக்ளுக்கு வட்டி பாதிப்பு என்பதும் இருக்காது என்கின்றனர். மேலும் அந்நிறுவன நிர்வாகி செல்வமணி, முதல் கட்டமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலிய எண்ணெய் நிறுவன பங்குகளில் இந்த வசதியை ஏற்படுத்தியிருப்பதாகவும், வாடிக்கையாகர்களின் வரவேற்பை தொடர்ந்து இந்த வசதி விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினம் தினம் பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் லிட்டருக்கு 20 காசுகளும் அதிகரித்து விற்பனையாகி வரும் நிலையில், இந்த கடன் திட்டமானது  வாடிக்கையாளரக்ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலுக்கு இந்த திட்டம் ஒரு மாற்று வழிதை கொடுக்கும் என்கின்றனர் வணிக வல்லுனர்கள். எரிபொருள் கடன் பெறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று பொதுமக்கள். வருத்தம் தெரிவித்துள்ளனர். 

தகவல்கள்: சுரேஷ்குமார்,செய்தியாளர்- கோவை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com