இ-பதிவு சந்தேகங்களுக்கு '1100' கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

இ-பதிவு சந்தேகங்களுக்கு '1100' கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்
இ-பதிவு சந்தேகங்களுக்கு '1100' கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

இ-பதிவு குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது.

அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்த நிலையில், அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com