ஜெயலலிதாவின் கார் டிரைவர் எப்படி இறந்தார்? : எஸ்.பி விசாரணை

ஜெயலலிதாவின் கார் டிரைவர் எப்படி இறந்தார்? : எஸ்.பி விசாரணை

ஜெயலலிதாவின் கார் டிரைவர் எப்படி இறந்தார்? : எஸ்.பி விசாரணை
Published on

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து நீலகிரி எஸ்.பி. விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டம், சித்திரபாளையம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர், 5 ஆண்டுகளுக்கு முன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் கார் ஓட்டுனராக வேலை செய்தார். இந்தநிலையில், கடந்த 28ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தின் சென்றபோத‌, ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். கோடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் கனராஜூக்கு தொடர்பு குறித்து, போலீசார் விசாரணை மேற்கொள்ளவிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா மற்றும் போலீசார் கனகராஜின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு ஆத்தூர் சென்ற முரளிரம்பா, விபத்து நடந்தபோது காரை ஓட்டிச்சென்ற ரபீக்கிடம் விசாரணை நடத்தினார். பின்னர் விபத்து நடந்த விதம் குறித்து ஆத்தூர் போலீசாரிடம் கேட்டறிந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com