இணையதள சேவை முடக்கம்: நீதிமன்றத்தில் முறையீடு
3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி கலவரம் தொடர்பாக, வதந்திகள் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இணையசேவை முடக்கம் எத்தனை நாட்களுக்கு என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. பதட்டமான சூழல் மாறும் வரை இந்தச் சேவை முடக்கம் தொடரும் என்று கூறப்படுகிறது.
3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டை பிற்பகலில் உயர்நீதிமன்றம் அவசரமாக விசாரிக்கிறது.