\
நதிகளை இணைப்போம்; ரஜினி வாய்ஸ்

நதிகளை இணைப்போம்; ரஜினி வாய்ஸ்

நதிகளை இணைப்போம்; ரஜினி வாய்ஸ்
Published on

ஈஷா யோகா எடுத்திருக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினி தன் ஆதரவை அளித்திருக்கிறார்.

கர்நாடக காவிரி பிரச்னை வரும் போது எல்லாம் ரஜினியும் சேர்ந்து விவாதிக்கப்படுவது வாடிக்கை. முன்பே அவர் நதிகளை இணைப்பதற்காக ஒரு கோடி நிதி வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார். அதை ஒட்டி இப்போது ஈஷாவின்  முயற்சிக்கு முழு ஆதரவை வழங்கிய இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. 

அதில் ரஜினி பாபாவின் முத்திரை பதித்த புகைப்படத்திற்கு முன் அமர்ந்து “ரத்தநாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதியாக்க மதிப்புக்குரிய சத்குரு எடுக்கும் இந்த முயற்சி மாபெரும் வெற்றியைடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று பேசியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com