வீடு புகுந்து காதல் தம்பதி கொலை..! நள்ளிரவில் கொடூரம்..!

வீடு புகுந்து காதல் தம்பதி கொலை..! நள்ளிரவில் கொடூரம்..!

வீடு புகுந்து காதல் தம்பதி கொலை..! நள்ளிரவில் கொடூரம்..!
Published on

நாமக்கல்லில் அருகே காதல் தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரும் சேந்தமங்கலத்தை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த அனிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு முன்பு பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் துணிச்சலோடு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள், விமல்ராஜும், அனிதாவும். அவர்களின் அன்புக்கு சாட்சியாக பிறந்த குழந்தையோடு, காமராஜர் நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை கருணையே இன்றி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அனிதாவின் தந்தை கருப்பசாமி, பதறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்தார். ஆவேசத்தில் இருந்த கொலையாளிகள், கருப்பசாமியையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த விமல்ராஜும், கருப்பசாமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விமல்ராஜ் உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில், நிக்கல்சன் என்பவர் குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்திருக்கிறது. சேலத்தைச் சேர்ந்த நிக்கல்சனுக்கும், கொல்லப்பட்ட அனிதாவின் அண்ணன் அருணுக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. அதனால், அருணை கொல்ல அடியாட்களோடு வீட்டிற்குள் வந்த நிக்கல்சன், தூங்கிக் கொண்டிருந்த அனிதா, விமல்ராஜ் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் காவல்துறைக்கு வேறொரு சந்தேகமும் எழுந்துள்ளது. அனிதா, வேறு சாதியைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டதற்கு பழிவாங்கவே, அவரின் சகோதரர் அருணே, கொலை செய்ய கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுகுறித்த தகவல்களைச் சேகரித்துவரும் காவல்துறையினர், பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com