தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் 'முகக் கவசம்' அணிய வேண்டும். அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

காங்கோ நாட்டிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிகிறது. காங்கோ நாட்டிலிருந்து வந்த ஆரணியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் உள்ளதா என ஆய்வுசெய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியும் முறையை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் உயிரிழப்புகளை தடுக்கலாம். தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க 1.11 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் மேலும் 8 பேருக்கு முதற்கட்ட அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com