\
“பருவமழைக்கு தயார் நிலையில் முன்னெச்சரிக்கை; பயம் வேண்டாம்”-உதயகுமார்

“பருவமழைக்கு தயார் நிலையில் முன்னெச்சரிக்கை; பயம் வேண்டாம்”-உதயகுமார்

“பருவமழைக்கு தயார் நிலையில் முன்னெச்சரிக்கை; பயம் வேண்டாம்”-உதயகுமார்
Published on: 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஊரணிகள், கண்மாய்கள், குளங்கள் ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் மளமளவென நிரம்பி வருகின்றன. இந்த நீர்நிலைகளை 24மணி நேரமும் மாவட்டம் நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com