\
‘தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க சென்னை ஐஐடியை அறிவுறுத்துவோம்’ - அதிகாரிகள் தகவல்

‘தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க சென்னை ஐஐடியை அறிவுறுத்துவோம்’ - அதிகாரிகள் தகவல்

‘தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க சென்னை ஐஐடியை அறிவுறுத்துவோம்’ - அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை ஐ.ஐ.டி.யில் தேசிய கீதத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் பாடல்களையும் இசைக்க அறிவுறுத்த உள்ளதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து அரசு, பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கட்டாயம் என்று கடந்த டிசம்பரில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஐஐடியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் பாடல்களை இசைப்பது பற்றி விரைவில் அதற்கு அறிவுறுத்த உள்ளதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தினாலும், சென்னை ஐ.ஐ.டி., தன்னாட்சி அதிகாரம் உடைய நிறுவனம் என்பதால், இறுதி முடிவை அந்நிர்வாகமே எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com