\
“பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்”-கடைகள், நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

“பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்”-கடைகள், நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

“பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்”-கடைகள், நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு
Published on: 

கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துகள் முதன்மையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் வெளியிட்ட அறிக்கையில், " தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர்‌ பலகை‌கள் தமிழில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மற்ற மொழிகள் பெயர் பலகையில் பயன்படுத்தப்பட்டால் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், மற்ற பிற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்‌டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைத்தல் குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது,

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com