விஜய் மேல் முறையீடு மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்

விஜய் மேல் முறையீடு மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்

விஜய் மேல் முறையீடு மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்
Published on

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் விமர்சனங்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை வேறு அமர்வின் விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரிய வழக்கை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்ட தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் விஜயின் மனுவை, வரிகள் தொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com