\
"வரலாற்று நடவடிக்கை!" - கோயில் சொத்துகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஜகி வாசுதேவ் பாராட்டு

"வரலாற்று நடவடிக்கை!" - கோயில் சொத்துகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஜகி வாசுதேவ் பாராட்டு

"வரலாற்று நடவடிக்கை!" - கோயில் சொத்துகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஜகி வாசுதேவ் பாராட்டு
Published on

கோயில்களின் சொத்துகள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழக இந்து அறநிலையத் துறையின் நவடிக்கையை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் வரவேற்று பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அறநிலையத் துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

அந்த ட்வீட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரையும் அவர் டேக் செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com