தமிழ்நாடு
சாலையில் கழிவுநீர்: தொற்று நோய் பரவுவதாக சென்னை மக்கள் புகார்
சாலையில் கழிவுநீர்: தொற்று நோய் பரவுவதாக சென்னை மக்கள் புகார்
சென்னை ராமாபுரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் திருமலை நகரில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாய் காட்சியளிக்கிறது. அதே போல் அருகே உள்ள அம்மா உணவகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் கசிவு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வெளியேறுகிறது
இது குறித்து நடவடிக்கை எடுக்ககோரி சென்னை மாநகராட்சியில் வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை என்று மக்கள் குற்றம்சாட்டிள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள், கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.