சுடுகாடு அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. சிசிடிவியில் வெளியான கொடூர காட்சிகள்..!

சுடுகாடு அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. சிசிடிவியில் வெளியான கொடூர காட்சிகள்..!

சுடுகாடு அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. சிசிடிவியில் வெளியான கொடூர காட்சிகள்..!
Published on

சென்னையை அடுத்த போரூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற கொடூர காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இதனைக்கொண்டு, குழந்தையை வீசிச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போரூரை அடுத்த காரம்பாக்கம் சுடுகாடு அருகே நேற்றிரவு சாலையோரம் உள்ள கால்வாயின் அருகே குழந்தை ஒன்றின் அழு குரல் கேட்டது. இதையடுத்து அருகே உள்ள தனியார் நிறுவன காவலர் ரவி என்பவர், அந்த குழந்தையை மீட்டு அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் ஒப்படைத்தார். சின்ன போரூரில் உள்ள சுகாதார மையத்தில் முதலுதவி செய்த பின்னர், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அக்குழந்தையை கொண்டு சென்றனர்.

இந்நிலையில் பச்சிளம் குழந்தையை ஒரு பெண்ணும் ஆணும் சாலையில் வீசி செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. பையில் மறைத்து வைத்திருந்த குழந்தையை அந்த இருவரும் சாலையில் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை வீசிச்சென்றவர்கள், அக்குழந்தையின் பெற்றோரா? அல்லது கடத்தப்பட்ட குழந்தையா என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com