208 ரன்கள் குவித்தது இந்தியா : சதத்தை தவறவிட்ட ரோகித்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-அயர்லாந்து இடையே இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி டப்லின் நகரத்தில் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டை பறிகொடுக்காமல் ரன்களை குவித்து வந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 208 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய வீரர்களில் சிக்கர் தவான் 74 (45) ரன்கள் குவித்தார். 61 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா சதத்தை தவறவிட்டு சாஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் இறுதி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சுரேஷ் ரெய்னா 10 (6), தோனி 11 (5), கேப்டன் விராட் கோலி 0 (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிப் பந்தில் இந்திய அணியின் ரன்கள் 202 இருந்தபோது, அந்தப்பந்தில் சிக்கர் அடித்த ஹர்திக் பாண்டியா 6 (1), அணியின் ரன்களை 208 ஆக உயர்த்தினார். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து அயர்லாந்து விளையாடி வருகிறது.