“தனி ஒருவன்” ஜடேஜா - 292 ரன்கள் சேர்த்தது இந்தியா

“தனி ஒருவன்” ஜடேஜா - 292 ரன்கள் சேர்த்தது இந்தியா

“தனி ஒருவன்” ஜடேஜா - 292 ரன்கள் சேர்த்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஜெயித்தது. இதையடுத்து 4 போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதால், அந்த அணிக்கு கோப்பை உறுதியானது. இந்நிலையில் தற்போது நடைபெறும் 5 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெற போராடி வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் பட்ளர் 89 (133), குக் 71 (190), மொயின் 50 (170) ரன்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6 விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஜோடி சேர்ந்த விஹாரி மற்றும் ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விஹாரி 56 (124) ரன்களில் அவுட் ஆனார். அவர் போனாலும் தொடர்ந்து ஆடிய ஜடேஜா தனி ஒருவனாக 86 (156) ரன்கள் குவித்து அவுட் ஆனார். 95 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 292 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com