தாயம் விளையாடியவருக்கு கொரோனோ : பூந்தமல்லியில் பரபரப்பு

தாயம் விளையாடியவருக்கு கொரோனோ : பூந்தமல்லியில் பரபரப்பு

தாயம் விளையாடியவருக்கு கொரோனோ : பூந்தமல்லியில் பரபரப்பு
Published on

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கொரோனா தொற்று உறுதி‌ செய்யப்பட்ட நபருடன் தாயம் விளையாடிய நபருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லியைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன ஊழியருக்கு இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடன் தாயம் விளையாடிய எதிர்வீட்டு நபருக்கும் கொரோனா இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்ட 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பணிபுரிந்த நகராட்சி சுகாதார ஊழியர்கள் 9பேரின் ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் வசித்த பகுதியைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்காமல், தாயம் விளையாடுவது, கேரம் போர்டு விளையாடுவது, கூடி நின்று பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என மருத்துவ வல்லுநர்களும், காவல்துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com