Hopital
Hopitalpt desk

தனியார் பள்ளிக்குள் நுழைந்து மாணவரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

திருவள்ளூரில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மணவாளநகரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் +1 மாணவர் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், மாணவரின் கை மற்றும் தலையில் வெட்டியுள்ளனர். சம்பவத்தை தடுக்க முயன்ற பெண் ஊழியர் ஜெனிஃபர் என்பரையும் அவர்கள் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

School
Schoolpt desk

இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவனை வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினர்? முன் விரோதம் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வரும் காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com