ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்: வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர்கள் யார், யார்?

ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்: வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர்கள் யார், யார்?
ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்: வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர்கள் யார், யார்?

ஒத்திவைக்கப்பட்டிருந்த நகர்மன்ற மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.

தமிழத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியது. பல இடங்களில் போட்டியின்றி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றிய திமுக, ஒருசில இடங்களில் கடும் போட்டியை சந்தித்தது. இந்நிலையில், ஒருசில நகராட்சி மற்றும் போரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல இடங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தல் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த கல்பனா தேவி ராஜினாமா செய்த நிலையில், இன்று நடைபெற்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சியாமளா பேரூராட்சி தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 24 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ் என்பவர் நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் வெற்றி பெற்றார் வெற்றி பெற்ற அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழை வழங்கினார்

சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சாந்தி போட்டியின்றி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீழ்வேளூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சந்திர சேகரனும், மதிமுக சார்பில் காந்திமதி ஸ்ரீதரன் ஆகிய இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் திமுக உறுப்பினர் சந்திசேரனுக்கு வாக்களித்தனர். இதனையடுத்து சந்திரசேகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நகர மன்றத் துணை தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் 11 வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி விசிக-விற்கு ஒதுக்கப்பட்டது. இதில் விசிக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சின்னவேடி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சின்னவேடி குடும்பத்தினர் துணைத்தலைவர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடைசி நிமிடத்தில், விசிக சார்பில் 2-வது வார்டில் வெற்றிபெற்ற ஸ்ரீதா செந்தில்குமார் மனு தாக்கல் செய்து, போட்டியின்றி வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி துணைத் தவைவராக சுயேச்சை வேட்பாளர் மணிமேகலை பாக்கியராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலுக்கு கூட்டணிக் கட்சியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பஞ்சவர்ணம் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com