“ஊழல் என்பது தமிழ்நாட்டு அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - இந்திரகுமார் தேரடி கருத்து

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் விமர்சகர் இந்திரகுமார் தேரடி நம்மிடையே கூறிய கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

அமைச்சர் பொன்முடி கைது குறித்து அரசியல் விமர்சகர் இந்திரகுமார் தேரடி பேசுகையில் “ஒரு அமைச்சர் தவறு செய்துவிட்டால் ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பே சீரழிந்த அமைப்பு என்று சொல்ல முடியாது. ஊழலை திமுகவும், அதிமுகவும் கண்டுபிடித்த மாதிரி பேசுவது, மிகைப்படுத்தி அரசியல் உரையாடலுக்கு மக்கள் மத்தியில் போய் பேசுவதற்கு பயன்படலாம். ஆனால், அது வாக்கரசியலில் முடிவை எட்டுவதற்கு பயன்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

பொன்முடி
பொன்முடி கோப்புப்படம்

தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை ஊழல் வழக்கில் தண்டிக்கபட்ட பிறகும் கூட அதற்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார்.

ponmudi
பதவியை இழந்தார் பொன்முடி... 3 ஆண்டு சிறை; ரூ.50 லட்சம் அபராதம்!

அதனால் ஊழல் என்பது தமிழ்நாட்டு அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதே மாதிரியான ஊழல் வழக்குகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com